Notice and Severance

Notice Requirement

வேலை வாய்ப்பு ஒப்பந்தமானது வேலைவழங்குனரினால் ஒழுக்க ரீதியான காரணங்கள் ஒழுக்க ரீதியற்ற விடயங்கள் அல்லது இறப்பு அல்லது சட்டத்தின் நடவடிக்கை என்பவற்றினால் முடிவுறுத்தப்படக்கூடியது.( இந்த வகைப்பாட்டில் ஒப்பந்தத்தில் விரக்தி மற்றும் செயற்பாட்டு இயலாமை உள்ளடங்கப்படக்கூடியன )அல்லது இராஜினாமா செய்தல், பதவி விலகல், அல்லது வேலை வாய்ப்பை கைவிட்டு விடுதல் போன்ற சூழலில்  பணியாளர் ஒருவரின் நடவடிக்கை. குறிக்கப்பட்ட நிலையான காலப் பகுதிக்கான ஒப்பந்தமாக இருக்கும்பட்சத்தில் ஒப்பந்தத்தில் விதந்துரைக்கப்பட்டவாறாக நிலையான காலப்பகுதியினை அடைந்துகொள்வதினால் அது முடிவுறுத்தப்படும்.

TEWA நிபந்தனைகளின் பிரகாரம் வேலை வழங்குனரானவர் ஒழுக்க ரீதியான வேலை நீக்கங்கள் தவிர்ந்த ஏனையவைகளில் வேலைநீக்கத்திற்கான காரணங்களை பணியாளருக்கு அறிவிக்க வேண்டிய தேவையுண்டு. எவ்வாறாயினும் ஒழுக்க ரீதியான வேலை நீக்கம் அல்லாத  TEWA ஆல் வேலையாட்கள் சட்டத்தின் வேலைவாய்ப்பு முடிவுறுத்துகையால் ஒரு பணியாளரின் வேலை நீக்கமானது மேற்கொள்ளப்படும் போது வேலையாளின் எழுத்து மூலமான முன் இணக்கம் அல்லது தொழில் ஆணையாளரின் முன்னரான எழுத்து மூலமான அங்கீகாரமின்றி இடம்பெற முடியாது. எவ்வாறாயினும் எழுதப்பட்ட அங்கீகாரம் தேவைப்படுத்தப்படாத சமயங்களாக பணியாளர்களின் தன்னார்வமான வேலை விலகல்கள், நியமனக் கடிதத்தில் தெளிவாக விதந்துரைக்கப்பட்டுள்ள திகதியில் ஓய்வுபெறுதல், கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பிரகாரமான ஓய்வு பெறுகைகள், நிலையான காலப்பகுதியின் முடிவுக்காலப்பகுதியை அடைந்து வேலை முடிவுக்கு வருதல், சட்ட நடவடிக்கையால் வேலை முடிவுறுத்தல் என்பன உள்ளடங்கும். இந்த ஷரத்துக்கள் “அட்டவணைப்படுத்தப்பட்ட பணியமர்த்தலுக்கு”, மட்டுமே பொருந்தும், அதாவது, கடை & அலுவலகப் பணியாளர் சட்டம், ஊதிய வாரியங்களின் அவசர சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் சட்டங்களின் கீழாக வரும் பணியமர்த்தல் ஒப்பந்தங்களுக்கு.

பணியாளரை வேலையில் இருந்து முடிவுறுத்துவதற்கு முன்பதாக முடிவுறுத்தும் அறிவித்தலை சட்டம் வேண்டிநிற்கிறது. எவ்வாறாயினும் சட்டமானது கூட்டாக வேலையை முடிவுக்கு கொண்டுவருதலை மாத்திரமே பேசுகிறதேயன்றி தனிப்பட்ட வேலை நிறுத்துகை பற்றி ஈடுபடவில்லை. ஆகக் குறைந்தது ஒரு மாதகால அறிவித்தல் கொடுக்கப்பட்ட பிற்பாடே பணியாளர்களை அவ்வாறு நீக்க முடியும். ஒரு பணியாளர் ஒருவருட சேவைக்கு பிற்பாடே ஒரு மாத அறிவித்தலுக்கு தகுதி பெறுபவராவர். சேவையில் ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள ஒரு பணியாளர் ஆனவர் எந்தவித அறிவித்தலுக்கும் உரித்துடையவராக மாட்டார்.

மூலம் 1950 ம் ஆண்டு கைத்தொழில் பிணக்கு சட்டத்தின் 31வது பிரிவு

Severance Pay

15 அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்களுக்கு வேலைவழங்கும் ஒரு வேலைவழங்குனருடன் சேவையின் 5 வருடங்களின் பூர்த்தி செய்த ஒரு தொழிலாளரானவர் வேலைவழங்குனராலோ அல்லது பணியாளராலோ அல்லது வேலைசெய்பவரின் இறப்பு அல்லது ஓய்வு அல்லது அல்லது சட்டத்தின் நடவடிக்கையினாலோ அல்லது பல்வேறு சேவைகளினாலோ முடிவுக்கு வரும் நிகழ்வின் பொழுது பின்வரும் விகிதங்களின் பணிக்கொடைக்கு உரித்துடையவராக உள்ளனர்.

1. மாதாந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கு சேவை பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு ஆண்டிற்கும் அரைமாத ஊதியம் அல்லது சம்பளம் கிடைக்கப் பெறுதல்

2. பணியாளர்களின் சேவையை பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண்டுக்குமாக 14 நாட்களுக்கான சம்பளம். இந்த தொகையானது இராஜினாமா செய்யப்படுதல், நீக்கம் செய்யப்படுததல், ஓய்வுபெறுதல் இறப்பு போன்ற பணியாளர்களின் பதவி முடிவுறுத்தல் எவையாக இருந்தாலும் ஒவ்வொரு சமயங்களிலும் இந்த தொகை கொடுக்கப்படக்கூடியதாக உள்ளது. அத்துடன் சில ஒடுக்கமான வரைவிலக்கணம் செய்யப்பட்ட சமயங்களில் தடுத்து வைக்கப்படவும் கூடியது.

பணியாட்களின் பணியமர்த்தலை முடிவுக்கு கொண்டுவருதல் (சிறப்பு ஷரத்துக்கள்) சட்டம் 1975 இன் கீழாக, பணிநீக்க பணம் செலுத்தலுக்கான ஷரத்து உள்ளது. மீண்டும் அமர்த்திக்கொள்வதற்கு பதிலான இழப்பீடானது, சட்டத்திற்கு மீறிய வகையில் எந்த ஒரு வணிகத்தையும் மூடி விடுவதினால் எழும் பணி நீக்கம் எனும் நிகழ்வில் மட்டுமே செலுத்தப்படக் கூடியதாகும், அந்த இழப்பீடானது பின்வரும் கணக்கிடுதலின் படி:

        i.            முதல் 1 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆம் ஆண்டுவரை சேவையாற்றிய வருடங்களுக்கு, வருடம் ஒன்றுக்கு  2.5-மாத சம்பளம், (அதிகபட்ச இழப்பீடு: 12.5 மாதங்கள்);

       ii.            6 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆம் ஆண்டுவரை சேவையாற்றிய வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு  2-மாத சம்பளம், (அதிகபட்ச இழப்பீடு: 30.5 மாதங்கள்);

     iii.            15 ஆம் ஆண்டிலிருந்து 19 ஆம் ஆண்டுவரை சேவையாற்றிய வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு  1.5-மாத சம்பளம், (அதிகபட்ச இழப்பீடு: 38 மாதங்கள்);

     iv.            20 ஆம் ஆண்டிலிருந்து 24 ஆம் ஆண்டுவரை சேவையாற்றிய வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு  1-மாத சம்பளம், (அதிகபட்ச இழப்பீடு: 40 மாதங்கள்); மற்றும்

       v.            25 ஆம் ஆண்டிலிருந்து 34 ஆம் ஆண்டுவரை சேவையாற்றிய வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு  0.5-மாத சம்பளம், (அதிகபட்ச இழப்பீடு: 48 மாதங்கள்)

ஆதாரம்: கருணைத்தொகை செலுத்தல் சட்டத்தின் §5 & 6; பணியாளரின் பணியமர்த்தலை முடிவுக்கு கொண்டு வருதல் (சிறப்பு ஷரத்துக்கள்) சட்டம் 1975

Cite this page © WageIndicator 2018 - Salary.lk - Notice and Severance