Minors and Youth

Minimum Age for Employment

பெண்கள் வயதில் குறைந்தவர் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் பற்றிய சட்டத்துக்கிணங்க 14 வயதுக்குட்பட்ட ஒருவர் சிறுவர் என கொள்ளப்படுவார்.

இச் சட்டமானது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சூழ்நிலைகள் தவிர்ந்த நிலைமைகளில் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை தடை செய்கிறது. கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தின் 16 பிரிவும் 14 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் வேலைவாய்ப்பை தடை செய்கிறது.

தொழிற்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் 16-18 இடைப்பட்ட பணியாளர்களுக்கான சாதாரண மணித்தியாலங்களானது ஒருநாளைக்கு 12 மணித்தியாலங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது. அவர்கள் பி.ப.6.00 ல் இருந்து காலை 6.00 மணி வரை வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலதிக நேர வேலை உட்பட மொத்த உயர்ந்தபட்ச வேலைமணித்தியாலங்களானது ஒரு வாரத்திற்கு 60 மணித்தியாலங்களாகும்.

1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் சட்டமானது 16 வயதிற்கு குறைந்தவர்களை எந்த வகையிலுமான சுரங்க வேலைகளில் நிலக்கீழ் வேலைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்கிறது. 16-18 இடைப்பட்ட இளம் பணியாளர்கள் தொழில் அமைச்சினால் 2010 இல் வெளியிடப்பட்ட அபாயகரமான தொழில்களின் ஒழுங்கு விதிகளில் நிரல்படுத்தப்பட்ட பொருத்ததன்மை மற்றும் அளவுகோல்களின் நிலைமைகள்  பூர்த்தி செய்யப்படுமாயின் 15 -18 இடைப்பட்டவர்கள் சுரங்கங்களில் வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கடை மற்றும் அலுவலகப்ப ணியாளர்கள் சட்டமானது கடையிலோ அல்லது அலுவலகத்திலோ 16 வயதிற்கு குறைந்தவர்கள் வேலைவாய்ப்பளிக்கப்படுவதை தடை செய்கிறது. அச்சட்டமானது மேலும் 14 -18 வயதிற்கு இடைப்பட்ட ஆண் பிள்ளைகள் காலை 6.00மணிக்கு முன்பாக வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. இது சில விதந்துரைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு விதிவிலக்காக உள்ளது.

பெண்கள் இளம் ஆட்கள், சிறுவர்கள் சட்டத்தின் மீறுகைகளுக்கான தண்டனையானது இழைக்கப்பட்ட குற்றத்தைப் பொறுத்துள்ளது. விதிக்கப்பட்ட தண்டப்பணமானது ரூபா 5000 – 10,000 வரையாகவும் மற்றும் சிறைத்தண்டனையானது ஆகக் குறைந்தது12 மாதங்களாகவும் அல்லது சில சூழ்நிலைகளில் தண்டனைப்பணம் சிறை ஆகிய இரண்டும் விதிக்கப்படுகின்றன.

மூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம் ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு சட்டத்தின் 13 ஆம் பிரிவு, 1954 ஆம் ஆண்டு கடை மற்றும்  அலுவலக பணியாளர்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவு 1973 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க சுரங்கம் மற்றும் கனிப்பொருட்கள் சட்டத்தின் 56 ஆம் பிரிவு

Minimum Age for Hazardous Work

18 வயதிற்கு குறைந்த இளம் ஆட்களின் வேலைவாய்ப்பானது தடை செய்யப்படுகிறது. இளம் ஆட்கள் வேலை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட அபாயகரமான தொழில்கள் செயற்பாடுகளின் நிரலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் இளம் ஆட்களின் வேலை செய்வித்தல் தடைசெய்யப்படுகிறது. 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் வேலை செய்யத் தடை செய்யப்பட்ட 51 விதமான வேலை நிலைகள் அல்லது மற்றும் தொழில் நிலைகளை உள்ளடக்கிய ஒரு நிரலானத அரசாங்கமானது அபாயகரமான வேலைச் செயற்பாடுகளாகக் கொண்டுள்ளது. இந்த வேலை நிரலில் உள்ளடங்குவனவாக மிருகங்களைக் கொல்லுதல், பூச்சிகொல்லிகளை பாவித்தல் அல்லது உற்பத்தி செய்தல், மதுபானங்கள், உற்பத்தி செய்தல், எடுத்து செல்லல், விற்பனை செய்தல், மதுபானக் கடைகளில் அல்லது மதுபான சாலைகளில் வேலை செய்தல், வெடிபொருட்களை உற்பத்தி செய்தல் எடுத்து செல்லல், அல்லது விற்பனை செய்தல், ஆழமான நீர்களில் மீன்பிடித்தல், சுரங்க வேலை அல்லது நிலத்திற்கு கீழான வேலைசெய்தல், பாரமான பொருட்களையும், பயணிகளையும் போக்குவரத்து செய்தல், சுழியோடுதல், பி.ப. 8.00 மு.ப 6.00 மணியில் இருந்து வேலை செய்தல்

மூலம்: 1956 ஆம் ஆண்டு பெண்கள், இளம்ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்பு மீதான சட்டத்தின் 20 பிரிவு 1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் 10(2) ஆம் பிரிவு 2010 ஆம் ஆண்டு அபாயகரமான தொழில்களின் ஒழுங்குவிதிகள்

Regulations on Minors and Youth

  • 1954 සාප්පු හා කාර්යාල සේවක (රැකියා හා පාරිශ්‍රමික රෙගුලාසි) පනත / கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் 1954 (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிகள்) / Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, 1954
  • 1956 කාන්තාවන්, තරුණ පුද්ගලයන් සහ ළමයින් සේවයෙහි යෙදවීම පිලිබඳ පනත / 1956 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது மீதான சட்டம் / Employment of Women, Young Persons and Children’ Act, 1956
  • අනතුරු සහිත වෘත්තිය රෙගුලාසි 2010 / 2010 ஆண்டு அபாயகரமான தொழில் ஒழுங்குவிதிகள் / Hazardous Occupations Regulations, 2010
Cite this page © WageIndicator 2018 - Salary.lk - Minors and Youth