இழப்பீடு

மேலதிக நேர இழப்பீட்டுக் கொடுப்பனவு

கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தின் பிரகாரம் சாதாரண வேலை மணித்தியாலங்கள் 8 மணித்தியாலங்களாகவும் வாரத்திற்கு 45 மணித்தியாலங்களாகவும் இருக்கும். கைத்தொழில் கட்டளைச்சட்டமானது சாதாரண வேலை மணித்தியாலங்கள் ஒரு நாளைக்கு 9 மணித்தியாலத்தை விஞ்சக்கூடாது இது உணவு ஓய்வுக்காக அனுமதிக்கும் இடைவேளைகள் உட்படுத்தாத நேரம் எனவும் குறிப்பிடுகிறது. இந்த சாதாரண வேலை மணித்தியாலங்கள் எல்லையானது ஒரு நிறைவேற்று நிலை அல்லது ஒரு முகாமைத்துவ பணியில் ஒரு அரச நிறுவனத்தில் உள்ளவர்களுக்கும் வருடத்திற்கு 6720 க்கு குறையாத சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்பத்தில் திரட்டிய சம்பளத்தில் இருந்து பெற்றுக்கொள்பவர்களுக்கும் பிரயோகிக்கப்பட முடியாதது.

ஒரு பணியாளர் குறித்துரைக்கப்பட்ட வேலை மணித்தியாலத்திற்கு மேலதிகமாக வேலைசெய்யுமிடத்து அவன் /அவள் சாதாரண கொடுப்பனவு விகிதத்தின்150% (1.5 மடங்கின் மேலதிக நேரக் கொடுப்பனவிற்கு உரித்துடையவராகிறார். ஒரு வாரத்திற்கான மேலதிக நேர கொடுப்பனவு மணித்தியாலங்களானது 12 மணித்தியாலங்களை விஞ்ச முடியாது.

ஊதியங்களை நிர்ணயம் செய்வதற்கென நிலைநாட்டப்பட்ட ஊதிய வாரியத்தினாலேயே இயல்பான ஒரு நாளுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட வேலை நேர மணிக்கணக்கினை நிர்ணயம் செய்கிறது.  உணவுக்கான இடைவேளை(கள்)  அல்லது ஓய்வுக்கென குறிப்பிடப்பட்ட நேரம் ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் இருந்தால் தினசரி பணியாற்றும் நேரமானது 9 மணி  நேரம் ஆகும். இந்த இடைவேளை ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக இருந்தால், பணியாற்றுவதற்கான நாளின் நேரமானது 9 மணி  நேரம் மற்றும் இந்த அதிகப்படியான நேரம் ஆகியவற்றின் மொத்த நேரத்திற்கு அதிகமாகக் கூடாது. இப்படியான மொத்தம் 12 மணி நேரத்திற்கு கூடுதலாக இருந்தாலும் கூட, பணியாயாற்றுவதற்கான ஒரு நாளின் இயல்பான நேரமானது 12 மணி நேரத்தைத் தாண்டக்கூடாது. சிறப்பு வகையான பணியாளர்களுக்கு ஊதிய வாரியமே ஒரு நாளுக்கு 12 மணி நேரத்திற்கு அதிகமான நேரத்தை நிர்ணயம் செய்யக்கூடும்.

மூலம் : 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தின் 3,6 மற்றும் 7 ஒழுங்குவிதிகள் அத்துடன் தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் 67 ம் பிரிவு

இரவுவேலை இழப்பீடு

இரவுவேலைக்காக சேர்க்கப்பட்ட கொடுப்பனவு எதுவும் இல்லை

விடுமுறைகள் மற்றும் ஓய்வு தினங்களுக்கான இழப்பீடு

வாராந்த ஓய்வு நாட்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஓய்வு நேர இழப்பீட்டை வழங்குவதற்கு ஒரு பணியாளர் வேலைவழங்குனரை வேண்டி நிற்பதற்கு எந்த ஏற்பாடுகளும் சட்டத்தில் இனம் காணப்படக்கூடியதாக இல்லை. எவ்வாறாயினும் பணியாளர் ஒரு பொது விடுமுறை தினத்தில் வேலை செய்வாராயின் அவன் /அவள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பதாக அல்லது அன்று ஒரு முழுநாள் விடுமுறையுடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். 

மூலம்: 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கட்டளைச் சட்டம்

வார இறுதி மற்றும் பொது விடுமுறை வேலை இழப்பீடு

பணியாளர்கள் வார இறுதியில் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும்படி கேட்கப்படக்கூடும். பணியாளர்கள் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும்பொழுது அவர்கள் சாதாரண ஊதியத்தின் விகிதத்திலும் 200 வீதத்திற்கு உரி்த்துடையவராகின்றனர். வாராந்த ஓய்வு தினங்களில் பணியாற்றுவதற்காக இந்த சேர்க்கப்பட்ட கொடுப்பனவு இல்லை.

மூலம்: 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம்

இழப்பீடு மீதான ஒழுங்குவிதிகள்

  • 1954 සාප්පු හා කාර්යාල සේවක (රැකියා හා පාරිශ්‍රමික රෙගුලාසි) පනත / கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் 1954 (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிகள்) / Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, 1954
loading...
Loading...