Work Injury Benefits

Disability / Work Injury Benefit

வேலை காயங்களை நான்கு வகையாக வகுக்களாம்; (i) நிரந்தரமான முழுமையான இயலாமை (ii)நிரந்தரமான பகுதியான இயலாமை (ii) தற்காலிகமான இயலாமை ஏற்படுதல் (iv)  தொழிலாளியை மரணத்தக்கு இட்டுச் செல்கின்ற அபாயகரமான காயம். காயத்திற்கான இழப்பீடு பணியாளரின் சம்பளத்தை பொறுத்தது.  வேலை காய நன்மைகள் தொழிலாளிக்கு ஆகக்குறைந்தது ஆறு மாத வேலை வழங்கப்படுகிறது மற்றும் தற்காலிக இயலாமைக்கான ஆகக்குறைந்த தகுதிகாண் காலம் 03 நாட்கள். 

நிரந்தரமான இயலாமையின் போது கொடுப்பனவு தொகையானது இயலாமையின் தன்மைக்கு ஏற்ப மதிப்பிடப்படுகிறது. தற்காலிக இயலாமையின் போது ஊதியத்தின் 50%  ஐந்து ஆண்டுகள் வரை செலுத்தபடும். ஆறு மாதத்தின் பின்  ஒரு தொகையாக நன்மைகள் வழங்கப்படலாம். தற்காலிகமான இயலாமைக்கான குறைந்தபட்ச  கொடுப்பனவு  ரூபா 1,96,083.80 ஆகும். அதே வேளை  அதிகபட்ச கொடுப்பனவு  ரூபா 550,000 ஆகும். நிரந்தர இயலாமை காரணமாக பணியிழப்பு எனும் நிகழ்விலும் கூட பணியாளர்களுக்கான நம்பிக்கை நிதி வாரியம் பலன்களை வழங்குகிறது. இந்தப் பலனானது, செயலிழப்பு வகையின் அளவினைப் பொருத்து 200,000 ரூபாய் எனும் உச்சவரம்புக்கு உட்பட்டு இருக்கும். இயலாதன்மையானது 50% க்கு அதிகமாகவும், இயலாதன்மை காரணமாக மணியமர்த்தல் முடிந்துபோனது என பணியமர்த்துபவர் சான்றளித்தாலும் மட்டுமே, இந்தப் பலனை அடைவதற்கு ஒரு  பணியாளர் தகுதி பெறுகிறார்.

தொழிலாளியை மரணத்தக்கு இட்டுச் செல்கின்ற அபாயகரமான காயத்துக்கு, பணியாளரின் தொழில் தன்மை வகுப்புக்கு ஏற்ப தங்கியிருப்போர்( விதவை பிள்ளைகள் விதவை தாய்) தங்கியிருப்போருக்கான நன்மையைப் பெறுவர். தொழிலாளியை மரணத்தக்கு இட்டுச் செல்கின்ற அபாயகரமான காயத்துக்குக்கான குறைந்தபட்ச  கொடுப்பனவு  ரூபா 1,320 ஆகும். அதே வேளை  அதிகபட்ச கொடுப்பனவு  ரூபா 5,500 ஆகும்.

மரணவீட்டுச் செலவுகள் தங்கியிருப்போரின் நன்மையில் இருந்து கழிக்கப்படும். அச்செலவுகளை மேற்கொண்டவருக்கு அதற்கான பணம் வழங்கப்படும். அப்பணமானது

i.        இழப்பீடு ரூபா 200000 விட குறைவாக இருக்கும் போது ரூபா 10000 விட  அதிகமாக இருக்கக் கூடாது.

ii.       இழப்பீடு ரூபா 300000 விட குறைவாக இருக்கும் போது ரூபா 15000 விட  அதிகமாக இருக்கக் கூடாது. 

iii.      இழப்பீடு ரூபா 500000 விட குறைவாக இருக்கும் போது ரூபா 20000 விட  அதிகமாக இருக்கக் கூடாது.

மூலம்: பணியாளர் இழப்பீடு சட்டம் 1994ல்  பகுதி மற்றும் அட்டவணை 4;  ISSA Country Profile for Sri Lanka 2014 

loading...