மகப்பேறும் வேலையும்

மகப்பேறு விடுப்பு

மகப்பேறு விடுப்பின் காலப்பகுதியானது வாராந்த விடுமுறைகளைத் தவிர்த்து ல் 12 வாரங்கள் 84 நாட்களாக இருக்கும். போயா தினங்கள், சட்டரீதியான விடுறைகள் அடங்காது. இந்த 12 வார விடுமுறையில் 2 வார விடுப்பானது மகப்பேற்றுக்கு முன்பதாகவும், மகப்பேற்று தினம் உட்பட (அத்துடன் 10 வாரங்களானவை மகப்பேற்றைத் தொடர்ந்ததானதாகவும் இருக்கும்.

மகப்பேறு நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எல்லா வேலையில்லாத நாட்கள் உட்பட மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. (2018 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க) மகப்பேற்று நன்மைகள் (திருத்தச்) சட்டத்திற்கு இணங்கிய வகையில், ஓர் உயிருள்ள பிள்ளையின் பிறப்பாக இருந்தால், 12 வார மகப்பேற்று விடுமுறையும், உயிரற்ற பிள்ளைப் பிறப்பாக இருந்தால் 6 வார மகப்பேற்று விடுமுறையும் ஏற்புடையதாகும். மூன்றாவது அல்லது அதற்குப் பின்னரான பிறப்பு எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இப்போது, முன்னைய பிள்ளைகளின் எண்ணிக்கை எதுவாக இருப்பினும், பிள்ளைப்பேற்றின் விளைவாக ஓர் உயிருள்ள பிள்ளை பிறக்குமாயின் பெண் வேலையாளர்கள் 12 வார மகப்பேற்று விடுமுறைக்கு உரித்துடையவர்களாவர். 

மகப்பேறு விடுப்பானது (கடை அல்லது அலுவலகப் பணியாளராக இருக்கும் பட்சத்தில்) தனது மகப்பேற்று தினத்தின் ஒரு மாதம் அல்லது 14 நாட்களுக்குள் அதனைக் குறிப்பிட்டு அவளது வேலை வழங்குனருக்கு அறிவிப்பு வழங்குவதன் மீது ஒரு பெண் பணியாளருக்கு வழங்கப்படுகிறது. மகப்பேற்றின் பின் அவள் வேலை வழங்குனருக்கு ஒரு வாரத்திற்குள்ளாக அவளது மகப்பேற்று அவள் இவ்வளவு தினமான விடுப்புக்களை வேலைவாய்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவள் அனுமதிக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கைய உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக மகப்பேற்று தினம் குறித்து வேலைவழங்குனருக்கு அவள் அறிவிக்க வேண்டும். அவள் தனக்கிருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறித்தும் குறிப்பிட வேண்டும்.

பல பிள்ளைகளின் பிறப்பு அல்லது மகப்பேற்று தொடர்பான சிக்கல்கள் மற்றும் நோய்கள் ஏற்படும் பட்சத்தில் மகப்பேறு விடுப்பை விஸ்தரிப்பது தொடர்பாக சட்டத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

மூலம்: மகப்பேறு நன்மை சட்டம் 1939 இலக்கம் 2. குடைகள் மற்றும் அலுவலக சட்டம் 1954ல் இலக்கம் 18(B)

 

வருமானம்

கடை மற்றும் அலுவலக சட்டத்தின் கீழ் மகப்பேறு விடுப்பானது முழுக் கொடுப்பனவுடன் கூடிய விடுப்பானதாக இருக்க, மகப்பேறு நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அக்காலப்பகுதிக்காக பணியாளர்களின் 6/7 (86%) செலுத்தப்படுகிறது.

வேலை வழங்குனரிடமிருந்து மகப்பேறு விடுப்பு உரிமை கோருபவர் ஒருவருட காலப்பகுதிக்குள்ளாக 150 நாட்கள் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு மகப்பேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன என்பதுடன் மகப்பேற்றுக்கு முன்பாக வேலை வழங்குனருக்கு அப்பெண் கொடுக்கக்கூடிய அறிவித்தல் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக ஆகக் குறைந்தது 150 நாட்கள் பணியாற்றிய ஒரு பெண்ணுக்கு அவ்வாறான நன்மைகளாகிய மகப்பேற்று நன்மைகள் வழங்கப்படுகிறது.

முன்னர், சட்டத்தில் பெண் வேலையாளர்களுக்கான 12 வார மகப்பேற்று நன்மைகள் முதலாம் மற்றும் இரண்டாம் பிள்ளைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. (2018 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க) மகப்பேற்று நன்மைகள் (திருத்தச்) சட்டம் இந்த மட்டுப்படுத்தலை நீக்குகின்றது. இப்போது மகப்பேற்று நன்மைகளிலுள்ள வேறுபாடு (12 வாரங்கள் அல்லது 6 வாரங்கள்) முற்றிலும் உயிருள்ள அல்லது உயிரற்ற பிள்ளைப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மூலம்: கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தின் §18(C) மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டத்தின் 3-5

இலவச மருத்துவக் கவனம்

2000 ஆம் ஆண்டு சுகாதாரச் சேவைகள் சட்டத்தின் கீழ் மகப்பேறு இல்லங்கள் அமைக்கப்படுகின்றன. இலங்கையில் சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட குடும்ப சுகாதாரப்பணியகம் ஆனது மகப்பேற்றுக்கு முந்திய மகப்பேற்றுக்குப் பிந்திய அனைத்துமடங்கிய கவனத்தை வழங்குவதற்கு பொறுப்பாக இருக்கின்றது. மருத்துவக் கவனம் ஆனது கட்டணம் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

மூலம்: 2000 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் சட்டம்

மகப்பேறு மற்றும் வேலை ஒழுங்குவிதிகள்

  • 1954 සාප්පු හා කාර්යාල සේවක (රැකියා හා පාරිශ්‍රමික රෙගුලාසි) පනත / கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் 1954 (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிகள்) / Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, 1954
  • වර්ෂ 2000 සෞඛ්‍ය සේවා පනත / 2000 ஆம் ஆண்டு ஆரோக்கிய சேவைகள் சட்டம் / The Health Services Act, 2000
  • 1939 මාතෘ ප්‍රතිලාභ ආඥාපනත / 1939 ஆம் ஆண்டு மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டம் / Maternity Benefits Ordinance, 1939
loading...
Loading...