பாதுகாப்பு

தீங்கிழைக்கக்கூடிய வேலை எதுவும் இல்லை

கர்ப்பிணி பணியாளர்கள் 1939 ஆம் ஆண்டு மகப்பேறு நன்மை கட்டளைச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள், அல்லது 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கட்டளைச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்போர் எதிர்ப்பார்க்கப்படும் மகப்பேற்று நாளுக்கு முன்பான 3 மாத காலப்பகுதியின் பொழுது அவளின் பிள்ளையின் சுகாதாரத்திற்கு அல்லது அவளுக்கு தீங்கிழைக்கக்கூடிய எதுவுமான வேலைகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது. இதையொத்த தடையானது குழந்தை மகப்பேற்றின்பொழுது 3 மாதங்களின் பிற்பாடும் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவோருக்கு செயற்பாடாக்கப்பட்டுள்ளது.

மூலம்: 1939 ஆம் ஆண்டு மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம் §10(B), 1954 ஆம் ஆண்டு கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் §18(D)

வேலைநீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுதல்

மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம் கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தின் பிரகாரம் வேலைவாய்ப்பின் எல்லா அம்சங்களிலும் கர்ப்பத்துடன் தொடர்புடைய ஏதும் காரணங்கள் அல்லது அவளது கர்ப்பத்தின் நிமித்தமாக ஒரு பெண் பணியாளரை வேலைநீக்கம் செய்வது சட்டத்திற்கு எதிரானதாகும். ஆகவே கர்ப்பகாலம் மற்றும் மகப்பேறு விடுப்பு காலப்பகுதியின்பொழுது பணியாளரின் வேலைவாய்ப்பானது பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகிறது.

மூலம்: மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம் §10 கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டம் §18(E

அதே பதவிநிலைக்கு திரும்பிவரும் உதவி

மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம், கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தின் பிரகாரம் ஒரு பெண்ணிற்கு அவளது மகப்பேறு விடுப்புக் காலப்பகுதியின்பொழுது வேலைநீக்க அறிவித்தல் வழங்கப்பட முடியாது. இது பணியாளர்களுக்கு அத்தியவசியமாக அதே பதவிநிலைக்கு தான் இல்லாதிருப்பினும் வேலைக்கு திரும்புவதற்கான உரிமையை வழங்குகிறது.

மூலம்: மகப்பேறு நன்மைகள் கட்டளைச்சட்டம் §10, கடை மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டம் §18(E)

loading...
Loading...