திணிக்கப்பட்ட வேலை

நிர்ப்பந்திக்கப்பட்ட அல்லது கட்டாயமான வேலையினைத் தடை செய்தல்

நிர்ப்பந்திக்க்பபட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட வேலையானது அரசியலமைப்பில் தடை செய்யப்படுகிறது. குற்றவியல் கோவையானது நிர்ப்பந்திக்கப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட வேலையை தடைசெய்வதுடன் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகக் கருதுகிறது.

இந்தப் பிரிவின் ஏற்பாடுகளுடன் முரண்படும் ஒருவர் ஒரு குற்றத்தை இழைப்பதுடன் குற்றம் சாட்டப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கு மேலாக சிறையிடப்படுவதற்கோ அல்லது தண்டம் செலுத்தப்படுவதற்கோ ஏற்புடையவராகிறார். எவ்வாறாயினும் ஒரு பிள்ளையானது கட்டாய வேலையுடன் சம்பந்தப்படும் பட்சத்தில் குற்றமிழைத்தவர் 30 வருடங்களுக்கு விஞ்சும் அளவிலான சிறைத்தண்டனையையோ தண்டப்பணத்திற்கோ உள்ளாவார்.

மூலம்: 1979 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 11 ஆம் பிரிவு; 1985 ஆம் ஆண்டு குற்றவியல் கோவையின் 358 ஆம் பிரிவு

வேலையை விட்டுச்செல்வதற்கான உரிமை அல்லது வேலையை மாற்றிச் செல்வதற்கான சுதந்திரம்

தொழில் வழங்குனருக்கு உரிய அறிவித்தல் கொடுத்தபின் தமது தொழிலை மாற்றும் உரிமை தொழிலாளிக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு வேலை பாதுகாப்பு பற்றிய பகுதியைப பார்க்கவும்.

மூலம்: இல 31 கைத்தொழில் பிணக்கு சட்டம் 1950

மனிதநேயமற்ற மனித வேலைகள்

வேலை செய்யும் நேரமானது சாதாரண மணித்தியாலங்களுக்கு அப்பால் ஒரு வாரத்திற்கு 45 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் என விஸ்தரிக்கக்கூடியது. தொழிற்சாலை கட்டளைச் சட்டமானது சாதாரண மணித்தியாலங்களானவை ஒரு நாளைக்கு உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் அனுமதிக்கப்படும் இடைவேளைகள் உட்பட 9 மணித்தியாலங்களை விஞ்சக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. இது சம்பந்தமான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இழப்பீடுகள் மீதான பிரிவினை தயவு செய்து பார்க்குக

மூலம்: 1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப்ப ணியாளர்கள் சட்டத்தின் 6 மற்றும் 7 ஒழுங்குவிதிகள்

நிர்ப்பந்திக்கப்பட்ட வேலை மீதான ஒழுங்குவிதிகள்

  • 2010 වර්ෂය දක්වා සංශෝධනය කරන ලද පරිදි 1978 ශ්‍රී ලංකා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව / 1978 இலங்கை யாப்பு 2010 வரை திருத்தப்பட்டுள்ளது / The Constitution of Sri Lanka 1978, amended up to 2015
  • 1885 දණ්ඩ නීති සංග්‍රහය / குற்றவியல் சட்டக்கோவை 1885 / Penal Code, 1885
loading...
Loading...