சமூக பாதுகாப்பு

ஓய்வூதிய உரிமைகள்

காப்புறுதி செய்யப்பட்ட பணியாளர்கள் அவர்கள் 55 வயதை எட்டும் போது( பெண் பணியாளர்களுக்கு 50 வயது) அல்லது அவர்கள் மட்டுப்பட்ட பணியில் இருந்து இளைப்பாறி அரச சேவையில் இணையூம் போது, பணியில் உள்ள பெண்கள் திருமணம் புரியும் பொழுது, இலங்கையில் இருந்து நிரந்தரமாக புலம்பெயரும் பொழுது, நிரந்தர இயலாமைக்குள்ளாகும் பொழுது அல்லது அரசாங்க உத்தரவுக்கமைய பணியிடம் மூடப்படும்பொழுது வயது முதிர்வுக்குரிய( ஓய்வுதியம்) நன்மைகளுக்கு உரித்துடையவர்களாவர். பங்களிப்பானது குறைந்தது 10 வருடங்களாவது இருக்க வேண்டும்.

பணியாளர் மற்றும் தொழில்வழங்குனர் ஆகியோரின் பங்களிப்பின் மொத்த தொகையுடன் வட்டியும் இணைந்ததாக வயது-முதிர்வுக்குரிய நன்மை தொகை அமையும். பங்கிலாபத் தொகையானது வருடத்துக்கு ரூபா 1000 ஆகும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழாக, ஒரு பணியாளரின் பங்களிப்பானது அவருடைய/அவளுடைய மொத்த சம்பாத்தியத்தின் 8%  ஆகவும் பணியமர்த்துபவரின் பங்களிப்பானது பணியாளரின் மொத்த சம்பாத்தியத்தின் 12%  ஆகவும் இருக்கும். பணியாளரானவர் பணியாளரின் மொத்த சம்பாத்தியத்தின்  20%  தொகையை ஸ்ரீலங்காவின் EPF  துறைக்கான மத்திய வங்கியில் அடுத்த மாதத்தின் கடைசி தேதிக்கு முன்பாகவே செலுத்திவிட வேண்டும்.

ஆதாரம்: பணியாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், 1958 இன் §10 & 23

தங்கிவாழ்வோர் நன்மைகள்

நிதிய அங்கத்தவர் ஓய்வுக்கு முன்னர் இறந்தால் சட்டரீதியான வாரிசுகள் அல்லது நியமிக்கப்பட்டவர் தங்கிவாழ்வோர் நன்மைகளைப்பெற சட்டமானது இடமளிக்கிறது. பணியாளர் மற்றும் தொழில் வழங்குனரின் மொத்த பங்களிப்புடன் அதன் வட்டியும் சேர்ந்த மொத்த தொகையானது ஒரு அல்லது பல தங்கிவாழ்வோருக்கு வழங்கப்படும்.

மூலம்: இலக்கம் 25 ஊழியர் நம்பிக்கை நிதி சட்டம் 1980

பயன்பாடற்றுபோதல் நன்மைகள்

விபத்துக்கள் காயங்கள் வருத்தங்களால் நிரந்தரமான பயன்பாடற்றுபோதல் நிலை ஏற்படும்போது 1980 ஊழியர் நம்பிக்கை நிதிச்சட்டமானது பயன்பாடற்றுபோதல் நன்மைகளை வழங்குகின்றது. பணியாளர் மற்றும் தொழில் வழங்குனரின் மொத்த பங்களிப்புடன் வட்டியும் சேர்த்த ஒரு தொகை நன்மையாக வழங்கப்படுகிறது. பணியாளர் நிரந்தரமாக பணிசெய்ய முடியாமையை மதிப்பிடுவது அவசியமாகும்.

மூலம்: 1980 ஊழியர் நம்பிக்கை நிதிச்சட்டம் இலக்கம் 24

சமூக பாதுகாப்பு மீதான ஒழுங்குவிதிகள்

  • 1958 සේවක අර්ථසාධක අරමුදල් පනත / ஊழியர் சேமலாபநிதி சட்டம் 1958 / Employees' Provident Fund Act, 1958
  • 1980 සේවක භාර අරමුදල් පනත / ஊழியர் நம்பிக்கை நிதி சட்டம் 1980 / Employees' Trust Fund Act, 1980
loading...
Loading...