வேலை மற்றும் ஊதியங்கள்

குறைந்த பட்ச ஊதியம்

இலங்கையில் குறைந்தபட்ச ஊதியம் என்று எதுவும் இல்லை. குறைந்தபட்ச வேதனங்களானவை குறைக்கு உரித்தான முத்தரப்பு சபைகளால் இலங்கையில் 40க்கு மேற்பட்ட தொழில்துறைகளில் தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியமானது மணித்தியாலத்திற்கு வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு என்ற அடிப்படையில் ஊதியங்கள் சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஊதிய சபைகளினால் தீர்மானிக்கப்படக்கூடும். வேலைவழங்குனர்கள் குறித்த ஊதிய வர்த்தக ஊதிய சபையால் தீர்மானிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை செலுத்துவதற்கு வேண்டப்படுகின்றனர் குறைந்த பட்ச ஊதியத்தை தீர்மானிப்பதற்கான விசேட அளவுகோல் எதுவும் இல்லை. தொழில்துறை வியாபாரத்திலுள்ள பணியாளர்களுக்கு பிரயோகிக்கக்கூடிய வாழ்க்கைச்செலவு சுட்டியின் பிரகாரம் அது சரி செய்யப்படுகிறது. தொழில்துறை பிராந்தியம், தொழிலாளரின் வகை என்பவற்றின் பிரகாரம் குறைந்தபட்ச ஊதிய விகிதம் வேறுபடுகிறது. குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிப்பதானது அரசாங்கம் தொழில்சங்கம் பிரதிநிதிகள் மற்றம் வேலை வழங்குனர்களினால் தீர்மானிக்கப்படுகிறது.

பணியாட்களுக்கான தேசீய குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2016 இன் கீழாக எந்த ஒரு தொழில் அல்லது சேவையிலும் இருக்கின்ற அனைத்துப் பணியாட்களுக்கும் தேசீய குறைந்த பட்ச மாதாந்திர ஊதியமாக 10,000 (பத்து ஆயிரம்) ரூபாய்கள் எனவும், தேசீய தினசரி ஊதியமாக 400 (நானூறு) ரூபாய்கள் எனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பணியமர்த்துபவர் இதற்காக தமது வளாகத்தில் ஒரு பதிவேட்டினை பராமரிக்கவும் அதில் பின்வரும் தகவல்கள் கொண்டிருக்கவேண்டும் எனவும் கோரப்படுகிறது: அவரால் பணியமர்த்தப்படுகின்ற ஒவ்வொரு பணியாளரின் பெயர்; பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு பணியாளராலும் செயலாற்றப்படும் பணியின் வகை; மற்றும் ஒவ்வொரு பணியாளருக்கும் செலுத்தப்படும் தொகை. இப்படியான பதிவேட்டினை 6 ஆண்டுக் காலத்திற்கு போற்றிக்காக்க பணியமர்த்துபவர் கோரப்படுகிறார்.

பணியாற்றிய நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் (பொதுவான குறைந்தபட்ச கால விகிதம் என குறிப்பிடப்படுவது), எண்ணிக்கையிலான பணிக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதம் (பொதுவான எண்ணிக்கை விகிதம் என குறிக்கப்படுவது), பணியாற்றிய நேரத்தின் அடிப்படையிலான குறைந்தபட்ச சம்பாத்தியத்தை உறுதி செய்வதற்காக எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு பொருத்தமாகும் வகையிலான ஒரு குறைந்தபட்ச நேரவிகிதம் (உத்தரவாதமளிக்கப்பட்ட நேர விகிதம்), மற்றும் பணியாளர்களால் செய்யப்பட்ட அதிகப்படியான நேரத்திற்கான குறைந்தபட்ச விகிதம் ஆகியவற்றை ஊதிய வாரியங்கள் நிர்ணயிக்கின்றன.  

பணியாளருக்கான வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ் சட்டம் 2016 இன் கீழாக, 01 மே 2015 (டிசம்பர் 2015 வரை)  முதல் ஒவ்வொரு பணியாளருக்கும், அந்தப் பணியாளரின் வழக்கப்படியான சம்பாத்தியத்தைப் பொருத்து, பின் வரும் தொகைகளை “வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸாக”, வழங்க பணியமர்த்துபவர்கள் வேண்டப்படுகிறார்கள்:

a)      1,500 ரூபாய், மாதம் ஒன்றுக்கு, மாதாந்திர சம்பளமானது 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;

b)      60 ரூபாய், நாள் ஒன்றுக்கு, அவரது/அவளது தினசரி ஊதியமானது 1,600 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;

c)      எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு ஒரு மாதத்தில் கொடுக்கப்படக்கூடிய ஊதியம் அல்லது சம்பளத்தின் 15%;

d)      சம்பள விகிதம் 40,000 ரூபாய்க்கு அதிகமாகவும் ஆனால் 41,500 (அதிகபட்ச ஊதியம்) ரூபாய்க்கு மிகாமலும் இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச ஊதியம் மற்றும் உள்ளபடியான ஊதியம் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம்; மற்றும்

e)      தினசரி விகிதமானது 1,600 மற்றும் 1,660 க்கு இடையில் இருந்தால் 41,500 ரூபாய்க்கும் சம்பந்தப்பட்ட மாதத்தின் மொத்த ஊதியத்துக்கும் இடையிலான வித்தியாசத்தின் 4%.

இதில் முதல் மூன்று நிகழ்வுகளில் அதிக பட்ச “வரவுசெலவு ரீதியிலான நிவாரண அலவன்ஸ்-க்கான“ அதிகபட்ச தொகையானது 1,500 ரூபாயாக இருக்கும்.

ஜனவரி 2016 க்கு மேற்பட்டு, பணியாளரின் வழக்கமான சம்பாத்தியத்தைப் பொருத்து, பின் வரும் தொகைகள் “வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸாக” வழங்கப்படுகிறது:

  1. 1,000 ரூபாய், மாதம் ஒன்றுக்கு, மாதாந்திர சம்பளமானது 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்;
  2. 40 ரூபாய், நாள் ஒன்றுக்கு, அவரது/அவளது தினசரி ஊதியமானது 1,600 ரூபாய்க்கு மிகாமல் இருப்பின்; மற்றும்
  3. எண்ணிக்கை விகித பணியாளர்களுக்கு ஒரு மாதத்தில் கொடுக்கப்படக்கூடிய ஊதியம் அல்லது சம்பளத்தின் 10%;

வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ்-க்கான 2016 ஆம் ஆண்டிற்கான அதிக பட்ச தொகையானது 1,000 ரூபாய் ஆகும்.

சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று, குறைந்தபட்ச வேதனங்களுடனான இணக்கப்பாடு, கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக அலுவலர்களை நியமிக்கும் தொழில் ஆணையாளர் அலுவலகத்தினால் உறுதிசெய்யப்கின்றது. எந்தவொரு வியாபாரத்திலுமுள்ள வேலையாளர்களின் தொழில்தருநர்கள், வர்த்தகம் மேற்கொள்ளப்படும் வளவுகளில், ஒவ்வொரு வேதனக் காலப்பகுதிக்குமான பின்வரும் தகவல்களின் தெளிவானதும் துல்லியமானதுமான எழுத்துமூலப் பதிவுகளைப் பேணி வருவதும் வைத்திருப்பதும் கட்டாயமானதாகும்.

(அ) வேதனக் காலப்பகுதி;

(ஆ) குறித்த வேதனக் காலப்பகுதிக்காக வேதனங்கள் செலுத்தப்பட்ட வேலையாளர்களின் பெயர்கள்;

(இ) அந்த வேதனக் காலப்பகுதியில் அந்த ஒவ்வொரு வேலையாளரும் வேலை செய்த மணித்தியாலங்களின் அல்லது நாட்களின் எண்ணிக்கை;

(ஈ) அந்த வேதனக் காலப்பகுதிக்காக அந்த ஒவ்வொரு வேலையாளருக்கும் செலுத்தப்பட்ட வேதனங்கள்;

(உ) அந்த வேதனம் செலுத்தப்பட்ட திகதி;

(ஊ) அந்த வேதனங்களிலிருந்து கழிக்கப்பட்டவைகள்; மற்றும்

(எ) அத்தகைய ஏனைய விடயங்களின் விபரங்கள் குறித்துரைக்கப்பட முடியும்.

தொழில்தருநர் ஒருவர், சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்திற்கும் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான சம்பளச் சபையின் தீர்மானமொன்றுக்கு இணங்கி ஒழுகத் தவறுவாராயின், அந்தத் தொழில்தருநர் மீது பின்வரும் குற்றப்பணமொன்றைச் செலுத்துமாறு விதிக்கப்பட முடியும்.

(அ) முதல் குற்றமாயின் 100 ரூபாவுக்கு குறையாத ஆனால் 250 ரூபாவுக்கு மேற்படாத தொகை;

(ஆ) (ii) இரண்டாவது தடவையாக இழைக்கப்பட்ட குற்றமாயின் 250 ரூபாவுக்கு குறையாத ஆனால் 500 ரூபாவுக்கு மேற்படாத தொகை; மற்றும்

(இ) (iii) மூன்றாவது தடவையாக அல்லது அதற்குப் பின்னர் இழைக்கப்பட்ட ஒரு குற்றமாயின் 500 ரூபாவுக்கு குறையாத ஆனால் 1,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை.

இந்தக் குற்றப்பணம், சம்பளச் சபையொன்றினால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச வேதனங்களைச் செலுத்தத் தவறியமையுடன் தொடர்புடையதாக இருப்பின், குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் குற்றம் தொடரப்படும் ஒவ்வொரு நாளுக்காகவும் அந்த தொழில்தருநர் மீது 50 ரூபாவுக்கு மேற்படாத தொகையொன்று விதிக்கப்படும். மூன்றாம் அல்லது அதற்குப் பிந்திய தடவைக் குற்றத்திற்காக, தொழில் தருநர், 6 மாதங்களுக்கு மேற்படாத மறியற்தண்டனைக்கு ஆளாக வேண்டியும் ஏற்படலாம்.

மேற்குறித்த தண்டங்களுக்கு (குற்றப்பணம் அல்லது சிறைத் தண்டனை) மேலதிகமாக, தொழில்தருநர் பின்வருவனவற்றைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட முடியும்:

(அ) செலுத்த வேண்டிய தொகைக்கும் (குறைந்தபட்ச வேதனம்) உண்மையாகச் செலுத்தப்பட்ட தொகைக்கும் இடையிலான வேறுபாடு மற்றும் சம்பளக் கட்டளைச் சட்ட சபையின் பிரிவு 4 (2அ) இன் படி செலுத்த வேண்டிய மிகை விதிப்பு;

(ஆ) தொழில்தருநரினால் வேலையாளருக்கு எந்தவொரு வேதனமும் செலுத்தப்படாவிட்டால் அந்தத் தொகைகளும் சம்பளக் கட்டளைச் சட்ட சபையின் பிரிவு 4 (2அ) இன் இணங்கச் செலுத்த வேண்டிய ஏதேனும் மிகை விதிப்புக்களும் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும்.

2016 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் கீழ், தொழில்தருநர்கள் தங்களால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளரினதும் பெயர்களைக் குறிப்பிட்டு தங்களால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு வேலைளயாளராலும் நிறைவேற்றப்படும் வேலை வகை, அந்த ஒவ்வொரு வேலையாளருக்கும் வேதனமாகச் செலுத்திய தொகை போன்ற தொடர்புடைய பதிவுகளை வளவினுள் பேணிப் பாதுகாத்து வருவது அவசியமாகும். தொழில்தருநர் ஒருவர், வேலையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தேசிய (மாதாந்த அல்லது நாளாந்த) வேதனத்தைச் செலுத்தத் தவறுவாராயின், ஆணையாளர் தலைமையதிபதி, புலன் விசாரணயின் பின்னர், அத்தகைய வேலையாளருக்கு அல்லது வேலையாளர்களுக்கு குறித்த காலப்பகுதிக்காக செலுத்த வேண்டியுள்ள, தவறுகையிலுள்ள தேசிய குறைந்தபட்ச வேதனத்தின் ஒரு பகுதியை அந்த அறிவித்தலில் குறித்துரைக்கப்படும் திகதிக்குள் வைப்புச் செய்யுமாறு வேண்ட முடியும்.

தொழில்தருநர் ஒருவர், குறைந்தபட்ச வேதனத்தைச் செலுத்துவது தொடர்பான ஏற்பாடுகளை மீறுவாராயின், நீதிவானொருவரால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட இருபத்தையாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணம் ஒன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாதவொரு காலத்துக்கு இருவகையிலொருவகையான மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும்.

மூலம்: சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 21-22 மற்றும் 40-44; 2016 ஆம் ஆண்டின் வேலையாளர்களுக்கான வரவுசெலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தின் பிரிவு 3, 2016 ஆம் ஆண்டின் வேலையாளர்களுக்கான குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் பிரிவு 3-9

குறைந்தபட்ச ஊதிய வீதத்தை அறிய குறைந்தபட்ச ஊதியங்கள் பிரிவினை பார்க்குக

ஒழுங்குக்கிரமமான கொடுப்பனவு

ஒழுங்கு கிரமமான கொடுப்பனவு ஊதியங்கள் சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம்,  ஊதியங்களில் மேலதிக வேலை அல்லது ஏதும் விடுமுறை தினங்கள் தொடர்பாக பதிலுபகாரங்களை அது உள்ளடக்குகிறது. ஊதிய சபைகள் கட்டளைச்சட்டம் மற்றும் கடைகள் அலுவலக சட்டம் என்பன ஊதியங்கள் தொடர்பான கட்டளைகளைக் கொண்டுள்ளன.

ஒரு ஊதிய சபையானது ஒரு விசேடித்த வர்த்தகத்திற்கான ஊதிய காலப்பகுதியினை அமைத்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் பணியாளர்களுக்கு எந்த நாட்டிகளின் முடிவில் ஊதியம் கொடுக்கப்படும் எனவும் விதந்துரைக்கலாம். ஊதிய சபை தீர்மானத்தின் கீழ் ஒரு பணியாளர் உட்படுத்தப்படாதுவிடின் ஒரு பணியாளர் ஊதிய காலப்பகுதியை அமைத்துக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் எந்தக் காலப்பகுதியிலும் ஊதிய காலப்பகுதியானது ஒரு மாதத்தை விஞ்ச முடியாது. ஊதியசபை கட்டளைச்சட்டம் மற்றும் கடை மற்றும் அலுவலக சட்டம் என்பன பின்வரும் இடைவெளிகளில் ஊதியம் கொடுப்பனவு செய்வதை வேண்டி நிற்கின்றன. சம்பள சபை சட்டம் மற்றும் கடை பணியாளர் சட்டம் என்பன பின்வரும் இடைவேளிகளில் கொடுப்பனவு செய்யும் படி கோரி நிற்கின்றன.

-  காலப்பகுதியானது 1 வாரத்தை விஞ்சியிருக்காத பொழுது ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்

-  காலப்பகுதியானது 2 வாரத்தை விஞ்சியிருக்காத பொழுது ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 5 நாட்களுக்கு முன்

-  காலப்பகுதியானது 1 வாரத்தை அதிகரித்து( ஆனால் 1 மாதத்தை விட குறைவாக உள்ள போது) ஊதிய காலப்பகுதி முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்

ஒரு குறிப்பிட்ட தவிர்க்கமுடியாத சூழலில் வழங்குனரால் பணியாளருக்கு ஊதியம் உரிய காலப்பகுதியில் கொடுக்க முடியாதநிலை தோன்றுமிடத்து அவ்வுதியத்தை வைத்திருந்து அதனை இயலுமான கிட்டிய சந்தர்ப்பத்தில் வழங்கவேண்டும்.

 

ஊதியசபைகள் சட்டம் மற்றும் கடை மற்றும் அலுவரக சட்டமானது சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட கழிவுகளை தர வேறு எவ்வகையிலும் ஊதியக்கழிவு செய்யலாகாது என கோரி நிற்கின்றன. வருமானவரி ஊழியர் சேமலாப நிதிக்கான கழிவு அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்துக்கான கழிவுகள் முதலியனவே சட்டத்தினால் முன்னிறுத்தப்பட்டவை. ஒரு தொழில் வழங்குனர் சட்டவிரோத கழிவுகளை மேற்கொள்வாராயின் சட்டநடவடிக்கைக்கு முகம் கொள்ளவேண்டும்.

தவறான நடத்தைக்கான ஒரு பணியாளரின் ஊதியத்தில் இருந்து ஒரு குறித்த தொகையை தொழில் வழங்குனர் கழிக்க முடியும். அவ்வகை தண்டப்பணத்தை தவிர்க்கும் வகையில் ஊழியர் தரத்தை பேண வேண்டப்படுகிறார். சட்டம் கோரிநிற்கும் உண்மையான பொறுப்புடமை என இதனை பொருள் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கள்: போதிய காரணங்கள் இன்றி வேலைக்கு வராதிருத்தல். போதிய காரணங்கள் இன்றி பணிக்கு பிந்தி வருதல். பணிதொடர்பான உத்தரவுகளை வேண்டுமென்று மீறுதல். பணிநேரத்தின் போது மதுவருந்தியிருத்தல். ஆயினும் இவ்வகை தண்டப்பணமானது அக்காலப்பகுதிக்கான மொத்த ஊழியத்தின் 5 வீதத்தை விட அதிகரித்தலாகாது. அத்தொகை அதைவிட அதிகம்; எனின் ஆணையாளரின் அனுமதி கோரப்படவேண்டும்.

கடை & அலுவலகப் பணியாளர் சட்டத்தின் கீழாக இருக்கும் ஒழுங்குமுறை 17 ஆனது பணியமர்த்துபவர் ஒருவர் சம்பளம் பற்றிய பதிவேட்டினை வைத்திருக்கும்படியும், அதில் பின்வரும் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கோருகிறது: பணியாளரின் பெயர்; வயது; பாலினம்; வகுப்பு அல்லது தரம் எதேனும் இருப்பின்; பதவியின் வகை அல்லது பெயர் அல்லது தொழில்; சம்பளம் கொடுக்கும் காலம் (மாதம், இரண்டு வாரங்கள் அல்லது வாரம்); சம்பளம் வழங்கப்படும் காலத்தின்போது செயல்படுத்தப்பட்ட பணியின் மணிக்கணக்கு; சம்பளம் வழங்கப்படும் காலத்தின்போது செயல்படுத்தப்பட்ட அதிகப்படியான பணியின் மணிக்கணக்கு; செலுத்தப்படக்கூடிய சம்பளத்திற்கான விகிதம்; செலுத்தப்படக்கூடிய அலவன்ஸ்-கள் (ஒவ்வொரு அலவன்ஸ்-ஐயும் தனித்தனியாக காட்டியபடி); சம்பள காலத்தில் ஈட்டிய சம்பளத்தின் மொத்தம்; மொத்த சம்பளத்தில் செய்யப்பட்ட அனைத்து பிடித்தங்கள் (ஒவ்வொரு பிடித்தத்தையும் தனித்தனியாக காட்டியபடி); சம்பள காலத்தின்போது சம்பளத்திலிருந்து கொடுக்கப்பட்ட முன்பணம்; சம்பள காலம் தொடர்பாக ஏதேனும் ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்பு நிதிக்கு பணியாளர்  மற்றும் பணியமர்த்துபவர் செய்த பங்களிப்புக்கள்; செலுத்தப்பட்ட மீத சம்பளத்தொகை மற்றும் செலுத்தப்பட்ட தேதி; ஒவ்வொரு சம்பள காலத்தின் தொடர்பாக செலுத்தப்பட்ட அதிகப்படியான நேரத்திற்கான மொத்த தொகை; வருமான வரிச் சட்டம் அல்லது மற்ற ஏதேனும் சட்டம் அல்லது நீதிமன்ற ஆணையின் கீழாக மீட்டுக்கொள்ளப்பட்ட தொகை; நிகர சம்பளத்தை பணியாளர் பெற்றுக்கொண்ட்தற்கான பற்றுச்சீட்டுக்கான ஒப்புகை. சம்பளம் வழங்கல் பதிவேட்டினை நாளது தேதிக்கு பதிவு செய்யவும் அதனை 4 ஆண்டுக் காலத்திற்கு போற்றி பாதுகாக்கவும் பணியமர்த்துபவர்கள் கோரப்படுகிறார்கள்.

கடை & அலுவலகப் பணியாளர் சட்டத்தின் கீழாக நேரடியாக சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள சட்டப்படியான உரிமை கொண்டவருக்கே பிடித்தங்கள் (சட்டத்தின் கீழாக இருப்பவை மற்றும் அப்படியான நபரின் ஒப்புதல் இல்லாதவை தவிர்த்து) ஏதுமில்லாது சம்பளத்தைக் கொடுக்க வேண்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பிடித்தங்கள் பணியாளருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தின் 60% க்கும் அதிகமாக இருக்கலாகாது என சட்டம் கோருகிறது.

ஊதியங்களுக்கான வாரியங்களின் ஆணையானது வேறுமாதிரியான ஷரத்துக்களைக் கொண்டிருக்கிறது. அங்கீகாரமற்ற பிடித்தங்கள் ஏதுமின்றியும் கூட, சட்டப்படியாக பெற்றுக்கொள்ள உரிமை கொண்டவருக்கே சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் இது வேண்டுகிறது. எனினும், அப்படியான பிடித்தங்களானவை அமைச்சரால் குறிப்பிடப்பட்ட தொழில் வகையில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தின் 75% க்கு மிகாமலும் மற்ற தொழில் வகையில் ஊதியத்தின் 50% க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: ஊதிய வாரியங்களின் அவசர சட்டத்தின் §2, 5 & 23 மற்றும் கடை & அலுவலகப் பணியாளர்கள் சட்ட ஒழுங்குறையின் §19

வேலை மற்றும் ஊதியங்கள் மீதான ஒழுங்குவிதிகள்

  • 1941 අංක 27 දරණ පඩි පාලක සභා ආඥාපන / ஊதியங்கள் சபை கட்டளைச் சட்டம் 1941 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க கட்டளைச்சட்டம் / Wages Boards Ordinance, Ordinance No. 27, 1941
  • 1954 සාප්පු හා කාර්යාල සේවක (රැකියා හා පාරිශ්‍රමික රෙගුලාසි) පනත / கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் 1954 (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிகள்) / Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, 1954
  • කම්කරු අයවැය සහන දීමනා පනත 2016 / பணியாளர்களுக்கான வரவுசெலவு ரீதியான நிவாரண அலவன்ஸ் சட்டம் 2016 / Budgetary Relief Allowance of Workers Act 2016
  • කම්කරුවන්ගේ ජාතික අවම වැටුප් පනත 2016 / பணியாட்களுக்கான தேசீய குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2016 / National Minimum Wage of Workers Act 2016
loading...
Loading...