வேலைவாய்ப்பு பாதுகாப்பு

எழுதப்பட்ட வேலைவாய்ப்புக் குறிப்புக்கள்

1954 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் ஆனது பணியாளர் தனது வேலையினை ஆரம்பிக்கும்பொழுது பணியாளரின் வேலை வாய்ப்பின் விபரங்களை வழங்க வேண்டுமென்று வேலை வழங்குனரை வேண்டி நிற்கிறது. எழுதப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தமானது பின்வரும் விபரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். வேலை பெறுபவரின் பெயர், பதவிநிலை, நியமனத்தின் தன்மை, நியமனம் அமுலுக்கு வரும் திகதி, ஆள் நியமிக்கப்பட்ட தரம், அடிப்படை பதிலுபகாரம் மற்றும் சம்பள அளவுத்திட்டம், பதிலுபகாரமானது வாராந்தமாகவா அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாகவா அல்லது மாதாந்தமாகவா வழங்கப்படுகிறது என்பது பற்றியது, வாழ்க்கைச் செலவு படி, ஏதாவது அலவன்சுகள் இருப்பின் அவைகளின் விபரம், நன்னடத்தை அல்லது பரிசோதிப்பு காலப்பகுதியில் ஆட்சி செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் நன்னடத்தை அல்லது பரிசோதிப்பு காலப்பகுதியில் நியமனத்தில் இருந்து சேவை முடிவுறுத்தல் செய்யப்படக்கூடிய சூழமைவுகள் என்பவற்றுடன் வேலை வாய்ப்பை கொண்டு நடாத்தும் சூழ்நிலைமைகள் மற்றும் வேலையில் இருந்து வேலை முடிவுறுத்தக்கூடிய நிலைமைகள் சாதாரண மணித்தியாலங்கள், வாராந்த விடுமுறைகள், வருடாந்த விடுமுறைகளின் எண்ணிக்கை, செலுத்தப்படக்கூடிய மேலதிக நேர வேலை கொடுப்பனவு விகிதம், வேலை வழங்குனரால் மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பின் அவ் ஏற்பாடுகள், வேலைவாய்ப்புக்கு பிரயோகிக்கக்கூடிய சேமஇலாப நிதியம், ஓய்வுதியத்திட்டம், பணிக்கொடைத்திட்டம், என்பன எவற்றையும் ஆளும் ஏற்பாடுகளும் நிலைமைகளும் மற்றும் பதவி உயர்வுக்கான நன்மைகள் என்பனவாம்.

பணியாளரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலேயே ஒப்பந்தம் எழுதப்படுவதுடன் அது உரிய முறையில் வேலைபெறுனரால் கைச்சாத்திடப்படுகிறது. வேலைவழங்குனர் இவ் ஒப்பந்தத்தின் ஒரு பிரதியினை வைத்திருக்க வேண்டும். எழுத்துமூல பணி ஒப்பந்தம் இல்லாவிடத்து பணியின் சம்பள மற்றும் நிபந்தனைகளை வாய்மூல ஒப்பந்தங்கள் மூலமே நிர்ணயம் செய்யவேண்டியுள்ளது. பொது சட்டங்கள் பிரயோகிக்கதக்க சட்டவலுவுள்ள முறைகள் வழமைகள் அல்லது பணியிடத்தில் உள்ள பிரயோகங்களும் நடமுறைகளும். அத்துடன் தொழில் நீதிமன்றுகளின் தீர்மானங்கள் அல்லது இணைந்துருவாக்கிய ஒப்பந்தங்கள்.

தோழில் சட்டங்களில் பயிற்சிநிலை வேலைகள் பற்றிய குறிப்பிடப்படவில்லை. அதனால் பயிற்சி நிலை பணியின் போது கொடுப்பனவு கொடுப்பது கட்டாயமல்ல அது விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மூலம்: இல 17 மற்றும் ஒழுங்குவிதிகள் 15 கடைகள் மற்றும் அலுவலகங்கள் ( தொழி;ல் மற்றும் பதில் உபகாரங்கள் ஓழுங்குவிதிகள்) சட்டம் 1954

நிலையான தவணை ஒப்பந்தம்

இலங்கை தொழிலாளர் சட்டம் நிரந்தர தன்மையுடைய பணிகளுக்கு நிலையான கால ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கிறது. நிரந்தர கால ஒப்பந்தங்களுக்கு தொழிலாளர் சட்டத்தில் ஏற்பாடுகளும் இல்லை. இந்த சட்டம் தற்காலிக ஊழியர்கள் பற்றியும் பேசுகிறது மேலும் இவர்கள் தற்காலிகமாக ஒரு தொழில் வழங்குனரால் மொத்தமாக ஒரு வருடத்தில் நூற்று எண்பது நாட்களுக்கு மேற்படாமல் தற்காலிக தன்மையுடைய வேலையை செய்வதற்கு அமர்த்தப்படுவதை குறிப்பிடுகிறது.

மூலம்:: 54 ஊழியர் சபைகள் சட்டம், 1979 இன் 32.

தகுதிகாண் காலம்

இலங்கையில் தகுதிகாண் காலத்திற்கான காலப்பகுதி தொழிலாளர் சட்டங்களில் தெளிவான ஏற்பாடுகள் இல்லை. பொதுவாக தகுதிகாண் காலம் ஆறு மாதங்கள்.  கடை மற்றும் அலுவலக பணியாளர் சட்டம் தகுதிகாண் காலத்தை  தெளிவாக குறிப்பிடுமாறும், தகுதிகாண் காலத்திற்கான நிலைமைகள் மற்றும்  எந்த சூழ்நிலையில் தகுதிகாண் காலத்தில் பணி ஒப்பந்தங்கள் நீக்கப்படலாம் என்பனவும் தொழில் வழங்குனர் வேண்டப்படுகின்றனர்.  

பயிற்சியாளர்களுக்காண வேலைவாய்ப்பு (தனியார் துறை) 1978 ஆம் ஆண்டு 8 இலக்க  சட்டம் தொழிலாளர்களும் தொழில் வழங்குனரும் அதிகபட்சம் ஒரு வருடம் வரை ஒப்பந்தம் மேற்கொள்ளாம் என குறிப்பிட்டுள்ள்து. பயிற்சி காலம் முடிவில், ஒழுக்கக் காரணங்களுக்காக அல்லது தெரிவு செயப்பட்ட தொழில் பயிற்சி

பயிற்சியாளருக்கான வேலை வாய்ப்பு( தனியார்துறை) சட்டம் 1978 பிரிவு 8யில் திருப்திகரமான தேர்ச்சியை அடைய தவறினால் அன்றி்,  தொழில் வழங்குனர் பயிற்சியாளருக்கு வேலையை வழங்க வேண்டும் அல்லது பொருத்தமான  வேலையை தேடவேண்டும்.             

மூலம்: கடை மற்றும் பணியாளர்( வேலைவாய்ப்பு மற்றும் பதிலுபகாரங்கள் ஒழுங்குவிதிகள்) சட்டம் 1954. பயிற்சியாளருக்கான வேலை வாய்ப்பு( தனியார்துறை) சட்டம் 8,  1978.

வேலை நிலைமைகள் மீதான ஒழுங்குவிதிகள்

  • 1954 සාප්පු හා කාර්යාල සේවක (රැකියා හා පාරිශ්‍රමික රෙගුලාසි) පනත / கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டம் 1954 (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பற்றிய ஒழுங்குவிதிகள்) / Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act, 1954
Cite this page © WageIndicator 2017 - Salary.lk - வேலைவாய்ப்பு பாதுகாப்பு